OnePlus 8T Launch – Price in India, features & specs
OnePlus 8T Launch
- ஒன் ப்ளஸ் நிறுவனம் பல்வேறு வகையான புதுவிதமான பல புதிய ஸ்மார்ட்போன்களை வடிவமைத்து வெளியிட்டு வருகிறது.
- அந்த வரிசையில் தற்போது ஒன் ப்ளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8டி
என்ற புதுவிதமான மொபைலை தயாரித்து வெளியிட்டுள்ளது. - பல அற்புதமான சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய மொபைலை அக்டோபர் 14-ஆம் நாள் ஒன் பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
- சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இந்த புதிய மொபைல் வெளிவந்துள்ளது.
- பொதுவாகவே ஒன் பிளஸ் ஸ்மார்ட் போன்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் அதற்குத் தகுந்த அம்சங்களுடன் இந்த மொபைல் வெளிவருவதால் இதன் விலை சற்று உயர்வாக இருப்பினும் அது பெரிதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் ஐபோன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் ஒன் பிளஸ் ஸ்மார்ட் போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
- இந்த ஸ்மார்ட்போன்கள் ஒன் பிளஸ் வேர்ல்ட் மற்றும் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான சமூக வலைதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இதன் அறிமுகத்திற்கு virtual reality (VR) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த புதுவிதமான அறிமுகம் இதற்கு சிறந்த அனுபவத்தை தருகிறது என்று சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.
- இதற்காக ஒன் பிளஸ் நிறுவனம் ஒரு சிறப்பு அழைப்பிதழ் களையும் வடிவமைத்து இது விரைவில் ரசிகர்களுக்கு கிடைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய நிலையில் இந்த ஒன் பிளஸ் மொபைலின் அறிமுகம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
முன்பதிவு செய்யலாம்
- இந்த ஒன் பிளஸ் மொபைலை அமேசான் மற்றும் ஒன் பிளஸ் வலைதளங்களின் வழியாகவும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
- இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மூலமாக முன்பதிவு செய்ய ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்ற தகவல்கள் வலைதளங்களில் வெளிவந்துள்ளது.
ஒன் ப்ளஸ் 8T மொபைலின் அம்சங்கள்
- தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஒன் பிளஸ் 8 ஸ்மார்ட்போனை விட சிறந்ததாக உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு வசதியுடன், 6.5-இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஒன் ப்ளஸ் மொபைல் இன் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- எனவே இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 4கே வீடியோ ரெக்கார்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
- மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் பிராசஸர் இடம்பெற்றுள்ளதால் இது கேமின் போன்ற வசதிகளுக்கு மிகவும் அருமையாக உள்ளது.
- இந்த ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் இல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரியை அதிகரிக்க இதில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
- மேலும் இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
- எனவே 50சதவிகிதம் சார்ஜை வெறும் 15நிமிடங்களில் நிறைவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனை நீங்கள் அமேசான் இணையதளத்தில் வாங்குவதற்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்