PUBG MOBILE
- Pubg இதன் முழுமையான பெயர் விளக்கம் PLAYERUNKNOWN’S BATTLEGROUNDS.
- இந்த Android Game விளையாட்டு இந்தியாவின் முன்னணி கேமாக திகழ்கிறது.
- இந்த விளையாட்டு நண்பர்களுடன் இணைந்து விளையாடும் வகையில் உள்ளதால் இது மற்ற கேமில் இருந்து மாறுபட்டு அனைத்து இளைஞர்களையும் ஈர்த்தது.
- Pubg Mobile ஒரு முழுமையான Battle Royal கேம்.
- இந்த கேமில் Real Time Graphics உள்ளதால் இந்த கேம் விளையாட தூண்டுதலாக அமைந்தது.
Pubg Mobile சிறப்பம்சங்கள்
- இந்த கேமில் ஒரு விளையாட்டில் 100 வீரர்கள் வரை பங்கேற்கிறார்கள்.
- இந்த 100 வீரர்கள் பாராசூட் உதவியுடன் 8×8 கிமீ தொலைவு கொண்ட ஒரு தீவில் குதிக்கின்றனர்.
- வீரர்கள் பாராசூட் உதவியுடன் இறங்கிய பிறகு தங்களுக்கு தேவையான ஆயுதங்களை அங்கு உள்ள வீடுகளில் இருந்தோ அல்லது மற்ற இடங்களிலிருந்து கைப்பற்ற வேண்டும்.
- அவ்வாறு கைப்பற்றி ஆயுதங்களுடன் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு அங்குள்ள வாகனங்களை உபயோகித்தோ அல்லது நடந்தோ ஓடியோ அல்லது நீச்சல் அடித்தோ தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
- இந்த கேமில் போராடி இறுதியாக உள்ளவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
- இந்த கேமில் உள்ள வரைபடத்தைப் பயன்படுத்தி மிகவும் தந்திரமாக மற்ற போட்டியாளர்களை தோற்கடிக்க வேண்டும்.
- இந்த கேம் விளையாட தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்த கேமை சுற்றி ஒரு zone போன்ற வளையம் உருவாகும் அந்த வளையம் தொடர்ந்து இந்த வரைபடத்தை சுருக்கிக் கொண்டே வரும் அப்படி சுருக்கிக் கொண்டே வரும்போது போட்டியாளர்கள் அனைவரும் அந்த குறிப்பிட்ட வளையத்திற்குள் வர வேண்டும் இல்லை என்றால் அவருடைய Health முழுவதுமாக குறைக்கப்பட்டு அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
High Graphics & HD Audio
- இந்த கேமில் High Graphics & HD Audio கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய வரைபடம் மற்றும் உயர் தரமான ஆடியோ இந்த கேமை விளையாட மிகவும் உதவியாக உள்ளது.
- உயர்ந்த ஆடியோ மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள 7.1 சரவுண்ட் ஆடியோ நீங்கள் விளையாடும்போது இதில் உணர முடியும்.
ஆபத்தான ஆயுதங்கள்
- இந்த கேமில் தற்போது நடைமுறையில் உள்ள துப்பாக்கிகள், கைகலப்பு ஆயுதங்கள் மற்றும் வீசக்கூடிய பொருட்கள் என அனைத்து ஆயுதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
- மேலும் வளர்ந்து வரும் ஆபத்தான ஆயுத கிடங்குகள் போன்றவையும் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை உபயோகித்து மற்ற எதிரிகளை அழிக்க வழிவகை செய்கிறது.
வாகனங்கள்
- உங்களது எதிரிகளை வேட்டையாட அல்லது உங்களுக்கு தேவையான விளையாட்டு மண்டலத்திற்குள் ஓட அல்லது விரைவாக தப்பிக்க கார்கள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் படகுகள் போன்ற பல்வேறு வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- நண்பர்களுடன் இணைந்து விளையாடுங்கள்
- இந்த கேமில் உங்கள் நண்பர்களுடன் இணைந்து இந்த கேமை விளையாட முடியும்.
- ஒரு குழுவிற்கு 4 பேர் என்ற கணக்கில் இந்த கேமில் உங்கள் நண்பர்களுடன் இணைந்து விளையாட முடியும்.
- மேலும் உங்கள் குழுவில் உள்ள அந்த நான்கு பேருடனும் நீங்கள் பேசிக் கொண்டே விளையாடலாம்.
- இப்படி உங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டே விளையாடும்போது உங்கள் திட்டத்தை ஒருங்கிணைத்து சரியாகி இந்த கேமில் வெற்றி பெறலாம்.
கணினியில் பப்ஜி
- நீங்கள் இந்த கேமை உங்களது கணினியில் அல்லது உங்களது லேப்டாப்பில் விளையாட நினைத்தால் இதற்காக முறையாக கொடுக்கப்பட்டுள்ள Emulator உபயோகப்படுத்தி இந்த கேமை உங்களால் உங்களது கணினியில் விளையாட முடியும்.
- இந்த கேம் டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும்.
good